டிடிவி தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா?

டில்லி,

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று டில்லி நீதிமன்றம் அறிவித்து உளளது.

இன்றைய விசாரணையின்போது  அவருக்கு ஜாமின் கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது டில்லி போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி ஆஜராகாததால் விசாரணையை மே 31ந்தேதிக்கு கோர்ட்டு தள்ளி வைத்தது.

அதையடுத்து நேற்றைய விசாரணையின்போது, நீதிமன்ற  சுருக்கெழுத்தாளர் விடுமுறையில் சென்றதாக கூறி, அவரது ஜாமின் மனுவிசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று டிடிவி தினகரனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி பூனம் சவுத்ரி வழங்குவார் எனப்படுகிறது.

அதன் காரணமாக டிடிவி தினகரனுக்கு இன்று தீர்ப்பு கிடைக்குமா என அவரது ஆதரவாளர்களி டையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.