சென்னை,

மிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இன்றைய கூட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அவர் சட்டசபையினுள் தனி ஆளாக அமர்ந்திருந்தார்.

முன்னதாக சட்டசபை வளாகம்  வந்த அவரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரது எம்எல்ஏக்கள் அழைத்து சட்டசபைக்குள் அழைத்துச்செல்ல முயன்றனர். ஆனால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தனசபாபதி மற்றும் விருத்தாச்சலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் அவரை சபைக்குள் அழைத்துச்சென்ற தங்கள் அருகில் அமர வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட 148ம் எண் கொண்ட இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவிதனர்.

இந்நிலையில் கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் சபையை விட்டு வெளியேறி யதால், சட்ட சபையில் தனந்தனியே  டிடிவி தினகரன் தனி ஒருவராக அமர்ந்திருந்தார்.

முன்னதாக சட்டப்பேரவைக்கு டிடிவி வந்தபோது அவரது தொண்டர்கள் ‘வருங்கால முதல்வர் நாளைமுதல்வர் வாழ்க’ என்று கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.