டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்பு!

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் மேலும் 60 பக்கம் கொண்ட புகார் மனுவும் வழங்கப்பட்டது. அதில் அவர்மீதுள்ள பெரா வழக்கு மற்றும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டிருந்தது.

மேலும், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர்,  டிடிவி.தினகரன் மீது  அன்னிய செலாவணி வழக்கு இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் தினகரன் மீனு மீதான அறிவிப்பை வெளியிடாமல் தேர்தல் அலுவலர் தாமதப்படுத்தினார். இதன் காரணமாக அவரது மனு தள்ளுபடியாகும் பரவலாக வதந்திகள் பரவின.

இந்நிலையில், திமுக வேட்பாளர் அளித்த புகார் மனுவை தள்ளுபடி செய்து, தினகரன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.