‘தொப்பி’யுடன் தினகரன் வேட்புமனு தாக்கல்!

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலையொட்டி  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

ஏற்கனவே அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் 11 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து 12  மணி அளவில் பாரதியஜனதாவைசேர்ந்த கங்கைஅமரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மதியம் 1.30 மணி அளவில் அதிமுக அம்மா  என்ற சசிகலா அணியை சேர்ந்த வேட்பாளர் டிடிவி தினகரன்  வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொண்டர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தினகரன், அவரது அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொப்பி சின்னத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் வெள்ளை நிற தொப்பி அணிந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா மதியம் 1.30 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.