அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவும் எனக்கே! டிடிவி தினகரன்

சென்னை,

திமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களும் என்னுடனேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறார் டிடிவி தினகரன்.

சென்னை  பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பெரா வழக்கு காரணமாக எழும்பூர் கோர்ட்டுக்கு புறப்பட்டபோது,  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுக கட்சியில் பிளவு என்பது இல்லை. எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் உள்ளனர். கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லை” என்றார்.

இதற்கிடையில், இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில்  அதிமுக  எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான அமைச்சர்கள் டிடிவி தினகரனுக்கு எதிராக உள்ளனர். அதுபோல பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் டிடிவிக்கு எதிராக உள்ளனர்.

இந்நிலையில் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் போன்ற  ஒருசில டிடிவி ஆதரவு எம்எல்ஏக்க ளின்  ஆதரவோடும், குண்டர்களின் துணைகொண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டப்படுவதாக தகவல்கள் உலா வருகின்றன.

இதற்கிடையில் இன்று டில்லி போலீசாரும் அவரிடம் விசாரணை செய்ய இருக்கிறார்கள். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அதிமுக இரு அணிகளிடையேயும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.