Random image

டிடிவி பெங்களூரில் முகாம்: இன்று சசிகலாவை சந்திக்கிறார்….

பெங்களூர்:

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தலைவர் டிடிவி தினரகன் இன்று  பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசுகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையிலும், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல், சசிகலா உறவினர் பாஸ்கரின் புதிய கட்சி  மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை நடத்த டிடிவி தினகரன் பெங்களூரில் முகாமிட்டு உள்ளார்.

இன்று அவர் சசிகலாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.