நக்கீரன் கோபால் கைது: தினகரன் வரவேற்பு

த்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் இன்று காலை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிந்தாதிரிப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் ஆளுநரை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டாதால் தர்ணா போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். கோபால் கைதை கண்டித்த தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் அவரை சந்தித்தார்.

கோபால் கைது செய்யப்பட்டதை பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.

ந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்று  அவர் கூறியுள்ளார்.