தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட திரையுலகினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட தமிழ்த்திரையுலகினருக்‍கு டிடிவி தினகரன் பாராட்டு  தெரிவித்துள்ளதுடன், அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்தும் கூறியுள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்‍கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த அன்புக்‍குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் கியோருக்‍கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்‍க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டம் என்றும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.