சசிகலா படத்தை பேனரில் போட மறுத்த டிடிவி: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரன், டிடிவி தினகரன் மற்றும் திமுக கட்சியையும் சரமாரியாக தாக்கி பேசினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வைக்கப்பட்ட பேனரில் சசிகலா படத்தை போட மறுத்த டிடிவி, சசிகலா விசுவாசி கிடையாது.. சசிகலா புஷ்பாவின் விசுவாசி என்று கூறினார். அதனால்தான்,  ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டிய சசிகலா புஷ்பாவை கூடவே தினகரன் வைத்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

நெஞ்சிலே வஞ்சத்தை வைத்துக் கொண்டு விஷத்தை கக்கி வருவதாக டிடிவியை வசை பாடிய அமைச்சர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர் என்றும், 10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தற்போது குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க டிடிவி தினகரன்.  முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர்,  அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி – டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.  மணல் கார்த்திகேயனை ஒரு பக்கமும்,  ஓடிப்போன ரத்தினசபா பதியை ஒருபக்கமும் பாதுகாப்புக்காக வைத்து கொண்டு டிடிவி பேசு வருகிறார் என்றார்

இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு பொறுப்பேற்று, மு.க. ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்  விஜயபாஸ்கர் கூறினார்.