Random image

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை முந்திய டிடிவி தினகரன்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது 2016ல் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும்.

தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆளுங்கட்சியை ஒரு சுயேட்சை வேட்பாளர் வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளார். டிடிவி தினகரன் 50.32% வாக்குககள் பெற்றார். அதிமுகவின் மதுசூதனன் 27.31% வாக்குகளையும் பெற்றார். 13.9% வாக்குகளை மட்டுமே திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பெற்றார்.

இந்த தொகுதியில் 2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், 2015ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட டிடிவி தினகரன் 1,162 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அவர் 89,013 வாக்குகள் பெற்றுள்ளார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். 3ம் இடத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகளும், 4வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 3,802வாக்குகள் பெற்றுள்ளார்.