தனிக்கட்சி பற்றிய செய்தி வதந்தி : தினகரன் அறிவிப்பு

துரை

டி டி வி தினகரன் தாம் தனிக்கட்சி துவங்கப் போவதாக வந்த செய்தி வதந்தி எனக் கூறி உள்ளார்.

சென்னை ஆர் கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி டி வி தினகரன் இன்று மதுரை வந்துள்ளார்.   அப்போது அவரை செய்தியாளர்கள் பேட்டி கண்டுள்ளனர்.    அந்தப் பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தினகரன் பதிலளித்தார்.

தினகரன், “தேர்தல் ஆணையம் தவறான நபர்களிடம் அதிமுகவை ஒப்படைத்துள்ளது.   அவர்களிடம் இருந்து கட்சியை மீட்டு எடுக்க நான் முயற்சி செய்து வருகிறேன்.   நான் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக வந்த செய்தி வதந்தி தான்.    நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.  விரைவில் எனது சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.

போக்குவரத்து ஊழியர் பிரச்சினையில் அரசு அலட்சியமாக உள்ளது.   போக்குவரத்து ஊழியர்கள், மக்களின் பிரச்னை ஆகியவைகளை தீர்க்க வேண்டியது அரசின் கடமை.   போக்குவரத்துக் கழகத்துக்கு தேவையான நிதியை இந்த அரசு ஒதுக்க வேண்டும்.   தொழிலாளர்கள் பிரச்னையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்”  என கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.