தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் கலந்து அடுத்த கட்ட நடவடிக்கை: டிடிவி தினகரன்

சென்னை:

குதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் கலந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று  டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தகுதி நீக்கம் செல்லும் என்றே தீர்ப்பு வழங்கிய நிலையில், தற்போது 3வது நீதிபதி, சத்தியநாராயணணும், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றே தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், 18 தகுதி நீக்கம் செய்யப்பட்  சட்டமன்ற உறுப்பினர் களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஹைகோர்ட் தீர்ப்பு பின்னைடவு அல்ல  என்று கூறியவர், நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றார்.

இன்று மாலை குற்றாலம் செல்லவிருப்பதாகவும் அங்கு அவர்களுடன் அலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக 18 பேர் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை நான் செயல்படுத்துவேன். தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்.

இந்த தீர்ப்பால் தொண்டர்கள், மேலும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இணைவர். துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

சட்டப்படி தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு வாய்ப்புள்ளது.

எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது.  இந்த வழக்கும் அதே பாதையில்தான் செல்கிறது.

இவ்வாறு  தினகரன் கூறியுள்ளார்.