பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று  பெங்களூர் பரப்பர அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிலாவை, அவரது அக்காள் மகனும், அதிமுக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

கடந்த 18ந்தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபித்ததை தொடர்ந்து, அதுபற்றிய தகவல்களை தெரிவிக்கவும்,

மேலும் வரும் 27ந்தேதி வெளிநாட்டில் இருந்து  கார் இறக்குமதி முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற இருப்பதாலும் அதுபற்றி இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தினகரனுடன் சசிகலாவின் கணவர் நடராஜன் மீதும் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேரையும் தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் உலா வருகின்றன.