சென்னை:

ளுநர் வித்யாசாகர் ராவை தனது ஆதரவாளர்களுடன் மதியம் 12.30 மணிக்கு டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

அப்போது, அவருடன் சென்ற மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தனது அணியில் இருந்து ஜக்கையன் வெளியிருப்பது குறித்து கூறும்போது, மீண்டும் குதிரை பேரம் தொடங்கி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தமிழக்ததில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏற்கனவே கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ள நிலையில், இன்று டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.

அவருடன்  3 எம்எல்ஏக்கள் மற்றும் 7 எம்பிக்கள் உடன் சென்றனர். அவருடன்  எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கருணாஸ், கோகுலகிருஷ்ணன் உள்பட எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்தனர்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார் என்றார்.

மேலும், எடப்பாடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை அகற்றாமல் ஒயமாட்டோம் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க கோரும்போது சீலிப்பர் செல்ஸ் தங்கள் வேலையை தொடருவர்.

இந்த முதல்வர் நீடிக்ககூடாது என்பதில் ஒற்றுமையாக உள்ளோம். ஆளுனரிடம் உட்கட்சி பிரச்சினை இல்லை என எடுத்து கூறியுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தன் கடமையை செய்வதாக உறுதி அளித்துள்ளார். குதிரைபேரம் நடக்க ஆளுனர் இடம் கொடுக்ககூடாது.

சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் தலைமைநிலைய செயலர், அவைத் தலைவர் பதவி கேட்டார். அவர் அணி மாறியது முன்பே தெரியும். அவர் மிரட்டப்பட்டுள்ளார். ஜக்கையன் ரயிலில் வரும் போது அவர் மீது பாதாளம் வரை சென்றுள்ளது. துரோக ஆட்சி நீடிக்காது. 9- ம்தேதி நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் நானே கலந்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.