வைகுண்ட ஏகாதசி அன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார் டிடிவி!

சென்னை,

டைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக, திமுகவை தோற்கடித்து அமோகமாக வெற்றிபெற்றார்.

இந்நிலையில், வரும்  29ம் தேதி அவ்ர  எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும்  29ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் அன்று பொறுப்பேற்க டி.டி.வி தினகரன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சட்டமன்ற செயலாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி டி வி தினகரன் அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகின்ற 29.12.2017 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள மாண்புமிகு சட்ட பேரவை தலைவர் அறையில் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.