வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் ஆளுநர் உரையில் உள்ளது: டிடிவி தினகரன்

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ஆளுநர் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், ஆளுநர் உரையில் ஒன்றும் இல்லை, வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் உரையில் பொங்கலுக்கு ரூ.1000 பரிசு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  ஆளுநர் உரையில்  கொள்கை எதுவும் இல்லை என்றார்.  அம்மா வழியில் செயல்படும் அரசு என கூறு கின்றனர்…. ஆனால் அம்மா தடை விதித்த பல திட்டங்களுக்கு இங்கே அனுமதி வழங்கி உள்ள தாக கூறியவர், 11 ஆயிரத்திற்கும் அதிகமான கோப்புகளில் சி.எம்.எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதாக கூறியிருக்கிறார்கள்… ஆனால் அதில்  மக்கள் நலன் இருப்பதாக தெரியவில்லை என்றவர்,  வானத்திற்கும், பூமிக்கும் உள்ள இடைவெளிதான் இருக்கிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன்,   அமைச்சர்கள் அடிக்கடி டில்லி செல்கிறார்கள்… ஆனால், அவர்கள் மக்களுக்காக செல்லவில்லை என்றவர்,  டில்லியில் உள்ள எஜமானர்கள் சொல்வதை கேட்டு இங்கே செயல்படத்தான் சென்று வருகின்றனர் என்றும் இதுவே அரசின் வாடிக்கையாக இருக்கிறது என்றும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் செய்த தவறு காரணமாகவே இன்று ஜெ மரணம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இன்று எதிர்க்கட்சிகள் எல்லாம் மீண்டும் ஜெயலலிதாவின் மரணத்தைக் குறித்து பேசுகிறார்கள் இது மிகவும் கேவலமாக இருக்கிறது என்றார்.

அமைச்சர் சிவி சண்முகம் ஜெ. மரணம் குறித்து குற்றம் சாட்டி உள்ளாரே என்ற கேள்விக்கு,  அமைச்சர் சண்முகம் நிதானத்தில் பேசினாரா என்பது தெரியவில்லை. அமைச்சரவை கூட்டம் நடைபெறவே இல்லை என்றும், அதற்கு நானே சாட்சி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஆனால் எந்த தேதியில் அமைச்சரவை கூடியது என்பது குறித்து முன்னாள் தலைமைச் செயலா ளர் ராமமோகன் ராவ் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்பதைசுட்டிக்காட்டிய டிடிவி  திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆகவே அமைச்சர் இப்படியெல்லாம் பேசுகிறார்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

கார்ட்டூன் கேலரி