டிடிவி ஆதரவு பழனியப்பனுக்கு முன்ஜாமின்! ஐகோர்ட்டு

சென்னை,

டிடிவி ஆதரவு முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தொடர்பு இருப்ப தாக கூறி, கூர்க் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவரை விசாரணை செய்ய நாமக்கல் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுப்பிரமணியன் மர்ம மரண வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அதுவரை முன்ஜாமின் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பழனியப்பனுடன்  மற்றொரு ஒப்பந்ததாரர் தென்னரசு என்பவரையும் போலீஸ் தேடியது.   இந்நிலையில் இருவருக்கும் நிபந்ததனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.