சிவகங்கை:

ன்மீது நடவடிக்கை எடுத்தால், சபாநாயகரின் கை இருக்காது என்று மிரட்டல் விடுத்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி மீது, அதிமுக கொறடா நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, தற்போது, தான் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என ‘பல்டி’ அடித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் இன்று புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தகுதி இழப்பு செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகிறது.

இந்தநிலையில் செய்தியாளிகளிடம் பேசிய ரத்தின சபாபதி, என்னை உருவாக்கிய இயக்கம் அதிமுக, அந்த இயக்கம் உருகுலைந்து விடக்கூடாது என நினைத்தேன் என்றும்,   இரண்டு அணிகளையும் இணைக்க நான் முயற்சி செய்தேன். அதற்காக கிடைத்த பரிசு தான் இது என்று விரக்தியாக கூறினார்.

அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்று கூறியவர்,  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினால் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம்  சிவகங்கை மாவட்டத்தில்  நடைபெற்ற டிடிவி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அறந்தாங்கி எம்எல்ஏவும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான  ரத்தின சபாபதி, சபாநாயகர் தனபால், மற்றவர்களை நீக்கியதுபோல, தன்னை நீக்கினால் அவரது கை இருக்காது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,  தன்னை கைது செய்து விடுவார்களோ என்று அஞ்சிய ரத்தின சபாபதி எம்எல்ஏ, முன்ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.