டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை:

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து அறிவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதி மன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து 3வது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3வது நீதிபதியின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.‘

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்திருந்த நிலையில், இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், டிடிவி தரப்பினர் தாக்கல் செய்த மனு சார்பாக தமிழக அரசு மற்றும் சட்டமன்ற செயலாளர் சார்பாக கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  இன்றைய விசாரணையின்போது, வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.