18 பேர் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதி முன் இன்று முதல் மீண்டும் விசாரணை

சென்னை:

குதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்த  டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களை, கட்சி கொறடா பரிந்துரையின் பேரில்,  சபாநாயகர் தனபால்  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  , உயர்நீதி மன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வழக்கு  3வது நீதிபதி விமலாவின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதை எதிர்த்து  டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் தங்கத்தமிழ்செல் வன் தவிர மற்ற  17 பேரும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதி மன்றம்,  3வது நீதிபதியாக விமலாவுக்கு பதில் நீதிபதி சத்தியநாராயணாவை நியமித்தது உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த 4ந்தேதி,  3வது நீதிபதி சத்தியநாராயணா முன்பு  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் தினமும்  விசாரணை நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி தகுதி நீக்கம் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  இன்று முதல் 27ந்தேதி வரை வழக்கு விசாரணை தொடர்ந்து நடெபற உள்ளது.