டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகருடன் சந்திப்பு!

சென்னை,

திமுக கொறடா அறிவுறுத்தலின் பேரில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அதுகுறித்த சரியில்லை என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, நோட்டீசில் கொடுத்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிடிவி ஆதரவு ஆதரவு எம்எல்ஏக்கள் தலைமை செயலகம் வந்து  இன்று நேரில் விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோட்டை வட்டாரத்தில்  பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செல்வன், 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சென்றை சென்று விளக்கம் அளிக்க உள்ளோம் என்று கூறினார்.

கண் துடைப்புக்காக இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுகிறது இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். சென்ற கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.