ஜெ. படத்தை மோடியாக மாற்றிய டிடிவி ஆதரவாளர் கைது!

சென்னை,

மிழக முதல்வர் தனது சட்டை பையில் மோடி புகைப்படம்  வைத்திருப்பது போன்று சித்தரித்து முகநூலில் பதிவிட்ட நபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓகி  புயலால்  பாதிக்கப்பட்ட குமரி  மாவட்ட மக்களை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி சந்திக்க வந்தார். அப்போது, மோடியை வரவேற்க சந்திக்கதமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கன்னியாகுமரி வருகை தந்திருந்தனர். அங்கு மோடியை  சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துரைத்து நிவாரணம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது முதல்வர் எடப்பாடியின்   சட்டை பையில் மோடி புகைப்படம் இருப்பது போன்று சித்திகரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. பொதுவாக அதிமுகவினரின் சட்டை பைகளில் ஜெ. படம் இருப்பதே வழக்கும்.

ஆனால், இதில் மோடி படம் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து  அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கனகராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், எடப்பாடி சட்டைப்பையில் ஜெ. படத்திற்கு பதிலாக மோடி படத்தை வைத்திருப்பது போன்று கிராபிக்ஸ் செய்து வெளியிட்டது மதுரை  மதுரை  மாவட்டம்  உசிலம்பட்டியை சார்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரிய வந்தது.

அதையடுத்து அவரை  போலீசார்  கைது செய்தனர். இவர் டிடிவி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.