புதுச்சேரி,

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று எடப்பாடிக்கு சால்வை அணிவித்து அவரது அணியில் இணைந்தனர்.

இதன் காரணமாக டிடிவி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

கடலூரில்  நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் சென்றார். போகும் வழியில் புதுவை வந்த எடப்பாடிக்கு அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, புதுவை அருகே, எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து அவரது அணியில் இணைந்தனர்.

புதுச்சேரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பும் அளித்தனர்.

அதிமுக, ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக பிளவுபட்டு, யாருக்கு செல்வாக்கு  என  செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ். அணியில் 11 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் உள்ளனர். டிடிவி தினகரன் அணியில் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்பட்டது.

மீதமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

விரைவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணையும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன், அசனா ஆகியோர்  முதலமைச்சர் எடப்பாடிக்கு  சால்வை அணிவித்து,  அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இது டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.