தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை,

திமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்ட, ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  நீட் தேர்வு மற்றும் நளினி, பேரறிவாளன் பரோல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இருந்தாலும், ஆலோசனையில்  டிடிவி தினகரனின் அறிவிப்பு குறித்தே விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை திடீரென,  ஆகஸ்டு 5ந்தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.  டிடிவி தினகரனின் திடீர் அழைப்பு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 28ந்தேதி சசிகலா மற்றும் திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமியின் மறைவின்போது, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர்.

இறுதி சடங்கின்போது, டாக்டர் வெங்கடேஷூக்கு ஆறுதல் தெரிவிக்கும் போது டிடிவி தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தனர். பின்னர் மூவரும் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

துக்க வீட்டில் மும்மூர்த்திகளான 3 பேலுரும்  சந்தோஷமாக கூடிகுலவியது, எடப்பாடி அணியி னரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே டிடிவி தினகரன்  ஆகஸ்டு 5ந்தேதி வரை கெடு விதித்திருந்தார். தற்போது, சசிகலா குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில், டிடிவியின் இன்றைய அறிவிப்பு அதிமுகவில் மேலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

 

அதிமுக தொண்டர்கள் பெரும்பாலோர், சசிகலாவின் கட்டுப்பாட்டுக்கள் வர விரும்பாத நிலை யில், கட்சியையும், தலைமை கழகத்தையும் கைப்பற்ற டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பது அதிமுக மற்றும் தமிழக அமைச்சர்களிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.

இதன்காரணமாக  அதிமுகவில் மீண்டும் பிரளயம் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.