ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து டிடிவி உச்சநீதி மன்றத்தில் மனு

சென்னை:

ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதி மன்றம்தில் மேல்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்கம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றி உள்ளனர்.

இதை எதிர்த்து, டிடிவி தரப்பினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், டிடிவி தினகரன் சார்பில், ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

டப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரியபோது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில்  தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் நிராகரித்த நிலையில்,  டிடிவி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தமிழக அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் அணி  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உரிமையில்லை என்று கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.