இந்தியா – கொரோனாவைவிட அதிகம் கொல்லும் காசநோய்..!

புதுடெல்லி: இந்தியாவில் 2019ம் ஆண்டில் மொத்தம் 24 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் இந்தியாவில் 79000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தவகையில், ஒவ்வொரு காலாண்டிலும் தலா 20000 பேர் காசநோயினால் மரணிக்கின்றனர். நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டதைவிட குறைவுதான் என்று கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், கடந்த 3.5 மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவெங்கும் சுமார் 15000 பேர் மாண்டுள்ளனர்.

கடந்தாண்டில் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேர் என்பது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 11% கூடுதல் ஆகும். அதேசமயம், அந்த ஆண்டில் 26.9 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

இந்தவகையில், கொரோனாவை விட, காசநோயே இந்தியாவை அதிகம் பேரை கொல்லும் நோயாக திகழ்கிறது.