செவ்வாய் ஊரடங்கு ஞாயிறுக்கு  மாற்றப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி

செவ்வாய் அன்று அமலாகும் முழு ஊரடங்கு ஞாயிறுக்கு மாற்றப்படும் எனப் புதுச்சேரி முதல்வர்  எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை இங்கு 7732 பேர் பாதிக்கப்பட்டு அதில் 110 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பரவுதலை முன்னிட்டு புதுச்சேரியில் செவ்வாய்க் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

புதுச்சேரியில் ஞாயிறு அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடுவதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் செவ்வாய் தோறும் அமலாகும் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று மாற்றப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.