டெல்லி:
லைநகர் டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. அதுபோல காலணி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு டெல்லியின் குடிசை பகுதி நிறைந்துள்ள துக்ளகாபாத் பகுதியில்  இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  காற்றின் வேகம் இருந்ததால், தீ மளமளவென் அருகே உள்ள குடிசைகளிலும் பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சில மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த கோர தீ விபத்தில் சுமார் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அரசாங்கம் சார்பில் தற்போது இழப்பீடு குறித்து மதிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில், துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் எங்களுக்கு வந்தது.

அனைத்து காவல்துறை ஊழியர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் 1,000-1,200 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.  சேதம் விவரம் தெரியவில்லை.
அதேபோல  டெல்லி  கேசவ்புரம் பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையிலும் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.   23 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்தில் உள்ளன. தீயை அணைக்கும் நடவடிக்கை தீயணைப்பு வீரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.