விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அதிரடியான டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படம் ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம். “நானும் ரவுடிதான்” படத்தில் பட்டையை கிளப்பிய விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் காம்போவின் அதிரடி வசனங்கள் மூலம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காமெடி ஆக்ஷன் கலந்த ஒரு முழு நீள டிரீட்டாக இந்த படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.