2020ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த துல்சி கபார்ட் என்ற பெண் அறிவித்துள்ளார்.

tulsitulsi

2016ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உறுப்பினர்கள் 5இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இவர் தொடர்ந்து ஹவாய் மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினராக(செனட்) இருந்து வருகிறார்.

அதிபர் தேர்தலில் மட்டும் துல்சி கபார்ட் வெற்றிப்பெற்றால் அவர் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இருப்பினும் அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்த அனைத்து மாநிலத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி பொறுப்பாளார்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் தெரிவித்திருந்தார்.

தனது இந்த அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டும் இயக்கத்தை துல்சி கபார்ட் தொடங்கியுள்ளார். டிவிட்டர் பதிவில், “ நாட்டுக்காகவும், நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் இணைவீர்களா ?” என குறிப்பிட்டுள்ளார்.