துருக்கி தேர்தலில் அதிபர் எர்டோகன் வெற்றி: அதிபராக 2வது முறையாக விரைவில் பதவி ஏற்பு

அங்காரா:

துருக்கி அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.  இதைத்தொடர்ந்து மீண்டும்  துருக்கி அதிபராக எர்டோகன் பதவி ஏற்க இருக்கிறார்.

துருக்கி அதிபராக எர்டோகர் இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டே முடிவு பெற  உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே தேர்தலை அறிவித்து தேர்தலை வெற்றிகரமாக நடத்தினார்.

துருக்கி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அதிபர் எர்டோகன் மக்களுக்கு நன்றி தெரிவித்த காட்சி

இதில்,  இதில் எர்டோகன் கட்சி 53 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட எர்டோகானும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் துருக்கி அதிபராக எட்டோகன் தேர்வாகி உள்ளார்.. விரைவில்  அதிபராக  பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி தேர்தலில் எர்டோகன் கட்சிக்கம்,  குடியரசு மக்கள் கட்சியின் மைய இடதுசாரி வேட்பாளரான முஹரம் இன்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள எர்டோகன்,  ”நான் மீண்டும் நம் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தை நிலை நிறுத்த எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு ஜனநாயகத்தை சிறப்பான முறையில் வழி நடத்துவேன்” எனக் கூறியுள்ளார்.