மருமகனை நிதி அமைச்சர் ஆக்கிய துருக்கி அதிபர்

துருக்கி

துருக்கியின் அதிபராக மீண்டும் பதவி ஏற்றுள்ள தயீப் எர்டோகன் தனது மருமகனை உடனடியாக நிதி அமைச்சராக நியமித்துள்ளார்.

துருக்கி நாட்டில் சென்ற மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தயீப் எர்டோகன் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் மிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   எதிர்ப்புக்களை மீறி அவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது துருக்கி நாட்டில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  கடந்த மாதம் பணவீக்கம் 15%க்கும் அதிகமாக இருந்தது.   கடந்த எப்ரல் மாதம் 5% ஆக இருந்தது சிறிது சிறிதாக அதிகரித்து இந்த நிலைக்கு வந்துள்ளது.    இதனால்  தற்போது வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய நிலையில் துருக்கி உள்ளது.

அதிபராக பதவி ஏற்ற உடன் எர்டோகன் தனது மருமகனான  பெரத் அல்பெராக் என்பவ்ரை நிதி அமைச்சராக நியமித்துள்ளார்.

எர்டோகன் தனதுபதவி ஏற்பு விழாவில், “துருக்கியர்களாகிய நாம் இன்று ஒரு புதிய சரித்திரத்தை தொடங்கி உள்ளோம்.  முன்பு நடந்தவைகளை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குவோம்” என தெரிவித்துள்ளார்.