சென்னை:

தூத்துக்குடி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி திமுக எம்பி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்களவை தேர்தலின்போது,  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்துள்ளதாக, வாக்காளர்  சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கை  நிராகரிக்கோரி திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்ததுடன். கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர்  சந்தானகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு  ஏற்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.