மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்7, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.  இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதி மன்றம் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதையடுத்து வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள்,  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும்,  இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூறிய நீதிபதிகள்,  விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது  என்று கூறிய நீதிபதிகள்,  சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.