கொரோனா தொற்றால் தூத்துக்குடி பூ மார்க்கெட் மூடல்

--

தூத்துக்குடி

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மார்க்கெட் மூடப்பட்டது,

தூத்துக்குடி நகரில் உள்ள ஜெயராஜ் சாலையில் நகர பூ மார்க்கெட் உள்ளது.  இங்கு சுமார் 50 கடைகள் உள்ளனர்.  இந்த பூ மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இயங்கும்  சுமார் 2 தினங்களுக்கு முன்பு இங்குள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது,

இன்று வெளியான இந்த சோதனை முடிவுகளில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால்  இந்த பூ மார்க்கெட் உடனடியாக மூடப்பட்டது.  மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத பூ வியாபாரிகள் தங்கள் கடைகளைப் பழைய பேருந்து நிலையத்தில் தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக சந்தையில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.   இந்த வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்து வர்த்தகத்தைத் தொடர்ந்துள்ளனர்.