தூத்துக்குடி: குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்!

--

தூத்துக்குடி.

குத்துச்சண்டை போட்டியின், ஓய்வு நேரத்தில் 14 வயது குத்துச்சண்டை வீராங்கனை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற 14 வயது வீராங்கனை மாரீஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி. வயது 14. தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

மல்யுத்த வீராங்கனையான மாரீஸ்வரி இன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்குகொண்டார். முதல்சுற்றை முடித்து இரண்டாவது சுற்றுக்கு ரெடியாகிக்கொண்டிருந்த இடைவேளையில் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இந்த பரிதாபமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தி விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.