புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி துறைமுகத்தில்  புயல்கூண்டு

 

oo

தூத்துக்குடி:

தூத்துக்குடி  வஉசி துறைமுகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

“வங்காள விரிகுடா பகுதியில்  தென்  அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. இது புயலாகவும் மாறக்கூடும்.

இதனால் கடலில் ராட்சத அலைகள் தோன்றலாம்.  கடலோர பகுதிகளில் கடற்காற்றின் வேகம் அதிகமாகஇருக்கும்.

இதையடுத்தே  தூத்துக்குடி  வஉசி துறைமுகத்தில்  1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும்,  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி