மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்: தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தூத்துக்குடி மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்…. நானும் மகிழ்ச்சி அடைவேன் என்று பஞ்ச் டயலாக் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஒரு நடிகர் என்ற முறையில் தன்னை பார்த்தால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன்.

திமுக மீதான முதல்வரின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கடந்த கால சம்பவங்களை எப்போதாவது குறிப்பிடலாம். எப்போதுமே பின்னால் திரும்பியே பார்த்து கொண்டிருப்பது சரியாக இருக்காது.   “தூத்துக்குடி வன்முறைக்கு திமுகதான் காரணம் என்பது பழிபோடும் அரசியல்” என்றும், “எப்பவாச்சும் பின்னாடி பார்க்கலாம், எப்பவும் பின்னாடி பார்த்தால் வேலைக்கு ஆகாது என கூறினார்.

சட்டமன்ற கூட்டத்தொரை திமுக புறக்கணிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்து செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொன்று சென்றுவிட்டார்.