தூத்துக்குடி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினரின் கண்மூடித் தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவல்துறையினரின் அத்துமீறிய செயலை கண்டித்தும்  வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி  கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களை குருவிகளை சுட்டுக்கொல்வதை போல் பெண்கள் உட்பட 11 பேரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி அமைதியான முறையில் தீர்வுகாண முயற்சிக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகியவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.