சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆலைக்கு சீல் வைத்து அரசின் நோட்டீஸை நுழைவு வாயில் கதவில் ஒட்டினார்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில், ‘‘ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்
’’ என்றார். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.