தூத்துக்குடி:
தூத்துக்குடியில், இன்று விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவ்ம அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த  போது, அதில் இருந்து வெளியான  விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியை அடுத்த  செக்காரக்குடி  பகுதியைச் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (20) ஆகிய 4 பேர் வந்துள்ளனர்.
முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும் பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் இறங்கியுள்ளனர். பின்னர் அவர்களும் வெளியே வரவில்லை.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள் ளார். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் உள்ளே இறங்கி பார்த்த்தபோது போது விஷவாயு தாக்கி 4பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4பேரின் உடல்களும் வெளியே மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.