சென்னை:

தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி, கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றன.  போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 2 பலியானதால் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும்  தலைமை செயலாளர்  டி.ஜி.பி உள்பட காவல்துறை  உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி ராஜேந்திரன்,  தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில்  உள்ளது. மேலும்தூத்துக்குடியில் கூடுதல் பாதுகாப்புக்கு மற்ற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறி உள்ளார்.