ரஜினியை கிண்டல் செய்தவர் பைக் திருட்டு வழக்கில் கைது

துாத்துக்குடி:

ஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதானார்.

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் 24. இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது.

வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மற்றும் கால்டுவெல் காலனி மணி23, ஆசிரியர் காலனி சரவணன் 22, ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது.

அவர்களை கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர்.

கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

காயமுற்றவர் களிடம் ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், ‘நீங்கள் யார்’ என கிண்டலாக கேட்டது குறிப்பிடத்தக்கது.

-ஏழுமலை வெங்கடேசன்

   ரஜினியை யார் என்று கேட்ட தூத்துக்குடி இளைஞர் (வீடியோ)