கார் ஏற்றி நடிகை கால் உடைத்த நபர்.. கட்டுபோடுக்கொண்டு வீட்டில் முடங்கினார்..

பாலிவுட் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ஆன்ச்சல் குரானா. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர் காரை குடியிருப்பு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மாடிப்படி அருகே நின்றுக்கொண் டிருந்தார். அப்போது பார்க்கிங்கிலிருந்து பின்பக்க மாக ஒரு நபர் கார் எடுத்தார். நடிகை ஆன்ச்சல் நிற்பது தெரியாமல் அவர் மீது காரை ஏற்றினார். இதில் கீழே விழுந்த நடிகைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது காயத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது காலுக்கு கட்டுபோட்டனர்


முன்னதாக ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆன்ச்சல் சாலையில் சென்றபோது சில நாய்கள் அவரை துரத்தி கடித்தன அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆன்ச்சல், ’முஜே சாதி கரோகே’ என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டு பர்சு வென்றிருக்கிறார்.
இதுபற்றி வீடியோ வெளியிட்ட ஆன்ச்சல்,’காயம் தான் ஆனால் யாரும் கவலைபடாதீர்கள். சீக்கிரம் குணம் ஆகிவிடுவேன்’ என தெரிவித்திருக்கிறார்.