Random image

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

மூக வலைதளங்களில் தன்னை அவதூறாக விமர்சிப்பதாக கண்ணீர்விட்ட சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சின்னத்திரை நடிகையான நிலானி  உதவி இயக்குநர் காந்தி லலித்குமாருடன் லிவிங் டு கெதர்க வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில நிலானியை திருமணம் செய்ய காந்தி விரும்பியதாகவும், அதை நிலானி மறுத்ததால், மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை நிலானி

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலானி குறித்து சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இது  தனது மனதை புண்படுத்துவதாக கூறி நிலானி செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டார்.

நிலானியின் இந்த குற்றச்சட்டை காந்தியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மறுத்துவந்தனர். நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். நிலானியும், காந்தியும் குடும்பம் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.  நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது