டிவி நடிகை தற்கொலையில் 2 காதலர்கள் கைது, 3வது காதலர் எஸ்கேப்..

தராபாத்தை சேர்ந்த டிவி சீரியல் நடிகை ஸ்ராவனி கடந்த சில தினக்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரை 3 காதலர்கள் ஏமாற்றியதால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


இதுபற்றி ஸ்ராவனியின் பெற்றொர் போலீசில் புகரர் அளித்தனர், அதன்பேரில் சாய்ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அசோக்குமார் என்பவர் தப்பி ஒடி தலைமறைவாகிவிட்டார்.
முன்னதாக சாய்ரெட்டி என்பவரை ஸ்ராவனி காதலித்தார். அவருக்கு திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தி ருந்தனர். இந்நிலை யில் சாய் ரெட்டியுடனான காதல் முறிந்தது.
பின்னர் டிக் டாக் பிரபலம் தேவராஜ் ரெட்டியுடன் ஸ்ராவனிக்கு காதல் மலர்ந்தது. அவர் நைசாக பேசி ஸ்ராவனி யை ஆபாசமாக வீடியோ எடுத்து அதைக் காட்டி பணம் பறித்தார். இதில் மனம் நொந்திருந்த ஸ்ராவனி தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவரை சந்தித்தார். அவர் ஸ்ராவனியை சினிமாவில் ஹீரோயினாக்குகிறேன் என்று சொல்லி அவரை சீரழித்தார். 3 காதலர்கள் ஏமாற்றியதால் ஸ்ராவனி மனம் வெறுத்து தற்கொலை செய்துக் கொண்டாராம்.
இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி