மாமியார் வீட்டில் திருட கணவருக்கு ஐடியா தந்த நடிகை திடீர் தலைமறைவு.. வீட்டுக்காரர் கம்பி எண்ணுகிறார்..

டிவி சீரியல் நடிகை சுசித்ராவை அவரது கார் டிரைவர் மணிகண்டப் காதலித்து மணந்தார். இவர் பண்ருட்டியை சேர்ந்த விவசாயின் மகன். சுசித்ரா மணிகண்டன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங் கால் வருமானம் இல்லாமல் இருவரும் கஷ்டப் பட்டனர். இந்நிலையில் சுசித்ராவை சொந்த ஊருக்கு மணிகண்டன் அழைத்துச் சென் றார். அவர்கள் திருமணத்தை சிறிய சிணுங் களுக்கு பிறகு பெற்றோர் ஏற்றுக்கொண் டனர்.


மணிகண்டன் வீட்டில் நகைகள், பணம் இருப்பதை கண்ட சுசித்ரா அதை எடுத்து வந்தால் ஷார்ட் ஃபிலிம் எடுத்து யூடியுபில் வெளியிட்டால் நிறைய சம்பதிக்கலாம் என்றார். பிறகு சுசித்ரா வேலையிருப்பதாக மாமியார் வீட்டில் கூறிவிட்டு சென்னை புறப்பட்டார். அவருக்கு பின்னால் மணிகண்டன் பணம் நகைகளை கொள்ளையடித் துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார்.


வீட்டில் கொள்ளை போனது பற்றி மணிகண்டன் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மணிகண்டன் கொள்ளை அடித்தது தெரிய வந்தது, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது சுசித்ரா தலைமறைவாக இருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி