நடிகையிடம் நிர்வாணப் புகைப்படம் கேட்ட டிவி தொடர் அதிகாரி

கேப்டன் தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரை உலகில் நுழைந்தவர் திவ்யா.    பிறகு இவர் பல சின்னத் திரை தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.    தற்போது வம்சம், மரகத வீணை போன்ற மெகா சீரியல்களில் நடித்து வருகிறார்.   வாய்ப்பு கிடைக்கும் போது தொகுப்பாளினி ஆகவும் பணி புரிகிறார்.

தனது வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி திவ்யா ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அதில், “சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி நடிகைகளுக்கும் பாலியல் தொல்லைகள் பெருகி வருகின்றன.   பல நடிகைகள் சினிமாத்துறையிலும் டிவித் துறையிலும் இது போல பல அனுபவங்களை கூறி வருகின்றனர்.    இது எனக்கும் நிகழ்ந்துள்ளது.  தொகுப்பாளினியான எனக்கு ஒரு பிரபலாமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடரில் வாய்ப்பு வந்தது.

நான் ஷூட்டிங் சென்ற போது அந்தத் தொடரின் குழு அதிகாரி ஒருவர் என்னிடம் கவர்ச்சி உடை அணிந்து புகைப்படங்களும்,  நிர்வாணப் புகைப்படங்களையும் அனுப்புமாறு கேட்டார்.   நான் அதிர்ச்சி அடைந்தாலும் அச்சம் அடையவில்லை.   நான் அவரை எதிர்த்து சரமாரியாக கேள்விகள் கேட்டதும் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்” எனக் கூறி உள்ளார்.