டிவி ஷூட்டிங் நடத்த அரசு சார்பில் கடந்த வாரமே அனுமதி தரப்பட்டது ஆனால் அதன் நடைமுறைகளை பின்பற்றுவது வெளியூரிலிருக்கும் நடிகைகளை வரவழைப்பது போன்றவற்றால் காலதாமதமாகி வந்தது. தற்போது அது பூர்த்தியாகி ஷூட்டிங் தொடங்குகிறது.


இது குறித்து நடிகை குஷ்பு டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எல்லா போராட்டத்துக்கும் வலிக்கு பிறகு நாளை முதல் டிவி ஹூட்டிங் தொடங்கு கிறது. 70 நாட்கள் லாக்டவுனுக்கு பிறகு தினசரி சம்பளதாரர்கள் முகத்தில் இப்போது தான் சிரிப்பை பார்க்க முடிகிறது. பட குழுவினரின் பாதுகாப்புக்கான முன்னேற் பாடுகள் செய்யப்பட்டிருகின்றன. விரைவில் உங்கள் அபிமான சீரியல்கள் டிவியில் வரவுள்ளது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வ மணி அவரது டீம், எங்களுடைய ஸ்டெப் உறுப்பினர்கள் மற்றும் சுஜாதாகோபால். பாலேஸ்வர், ஷங்கர், பாலு எங்களது அமைப்பு தலைவர் சுஜாதா எல்லோருக்கும் நன்றி. எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் மேலும் முதல்வர் , அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கும் நன்றி. அரசு அதிகாரிகளுக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார்.