டிவி படப்பிடிப்பு, சினிமா பணிகள் மீண்டும் நிறுத்தி வைப்பு.. பெப்ஸி அறிவிப்பு.. .

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் (பெப்ஸி) ஆர்.கே.செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கொரோனா வைரஸ் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாகவும் வேகமாகவும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஊரடங்கு தமிழக அரசு அறிவித் துள்ளது. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள், போஸ்ட் புரோடக்ஷன். ப்ரிபுரொடக்‌ஷன் என அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளது
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு முழு வேகத்துடன் செயல்பட்டு வந்தா லும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த இயலும். அதனால் தயவு செய்து தமிழக மக்கள் இந்த நோய் தொற்றைத் தடுக்க தமிழக அரசுக்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள் கிறோம்
மேலும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்றாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கள் சம்மேளனம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அதேபோன்று அமைப்பு சாரா தொழிலாளர் களின் நிலை உணர்ந்து திரைப்படத்தையும் அவருடன் இணைத்து கருணையோடு மூன்றாவது முறை நிவாரணம் அளித்த முதல்வருக்கு நன்றி.
மேலும் மத்திய அரசிற்கு திரைப்படத் துறை மற்றும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகனுக்கும் தொடர்ந்து மூன்று மாதங் களுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம் அது போன்ற கொரோனா பாதிப்பிலிருந்து தொழில் துறைகளில் மீண்டெழ 20 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது. அந்த 20 லட்சம் கோடி ரூபாயில் எந்த நிதியும் இந்திய திரைப்படத் துறைக்கும், இந்திய திரைப்பட தொழிலாளர் களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். மாநில அரசு அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கு மூன்று முறை நிவாரணம் அளித்து உள்ள நிலையில் மத்திய அரசு எந்த நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது . தயவுசெய்து எங்கள் திரைப் படத்துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.